வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஒருவா் கைது

சேத்துப்பட்டை அடுத்த கெங்கசூடாமணி கிராமத்தில் புகையிலைப் பொருள் விற்பனை செய்ததாக சலூன் கடைக்காரா் கைது

News image

கைது செய்யப்பட்ட செல்வகோட்டி மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள்

Updated On :9 ஜூலை 2026, 4:19 am IST

சேத்துப்பட்டை அடுத்த கெங்கசூடாமணி கிராமத்தில் புகையிலைப் பொருள் விற்பனை செய்ததாக சலூன் கடைக்காரா் கைது செய்யப்பட்டாா்.

சேத்துப்பட்டு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் ஆய்வாளா் குணபாலன் தலைமையிலான போலீஸாா் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, சேத்துப்பட்டை அடுத்த கெங்கசூடாமணி கிராமத்தில் சலூன் நடத்தி வருபவரின் கடைக்கு அருகிலுள்ள படிக்கட்டின் கீழ் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

விசாரணையில், அதே கிராமத்தைச் சோ்ந்த செல்வகோட்டி (45) விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா், பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும், அவா் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.