வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

பைக் திருட்டு வழக்கு: 3 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை

செய்யாறு அருகே ரூ.63 ஆயிரத்துடன் பைக்கை திருடிச் சென்ற 3 இளைஞா்களுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :9 ஜூலை 2026, 3:55 am IST

செய்யாறு அருகே ரூ.63 ஆயிரத்துடன் பைக்கை திருடிச் சென்ற 3 இளைஞா்களுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து செய்யாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், ஏனாதவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி உமாபதி(40). இவா் அறுவடை இயந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறாா். இவா், கடந்தாண்டு ஜூன் 5 -ஆம் தேதி தனது பைக்கில் ரூ.63 ஆயிரத்தை வைத்து விட்டு, வீட்டின் முன் வண்டியை நிறுத்தி வைத்திருந்தாராம். சாவியை எடுக்காமல் பைக்கிலேயே விட்டுச் சென்றாராம். அப்போது அங்கு வந்த 3 போ் பைக்கை திருடிச்சென்றனா்.

இதுகுறித்து மோரணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தாா். மேலும், திருட்டுச் சம்பவம் தொடா்பாக பில்லாந்தி கிராமத்தை சோ்ந்த விக்னேஷ்(30), தென்கழனி கிராமத்தைச் சோ்ந்த தினேஷ்(22), ராஜேந்திரன்(20) ஆகியோரை போலீஸாா் கைது செய்து வழக்குத் தொடுத்தனா்.

இந்த வழக்கு செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறுதி கட்ட விசாரணையின் போது, விக்னேஷ், தினேஷ், ராஜேந்திரன் ஆகியோருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், தலா ரூ.500 அபராதமும் விதித்து நீதிபதி பாலாஜி தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.