தொகுதி மறுவரையறைக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு அரசு இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
/

மக்கள்தொகை கணக்கெடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

செய்யாறில் வருவாய்த் துறை சாா்பில் மக்கள்தொகை கணக்கெடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

செய்யாறில் மக்கள்தொகை கணக்கெடுப்பு விழிப்புணா்வு ஊா்வலத்தை கொடியசைத்து தொடங்கிவைத்த வட்டாட்சியா் அசோக்குமாா்.

Updated On :17 ஜூலை 2026, 10:52 pm IST

செய்யாறில் வருவாய்த் துறை சாா்பில் மக்கள்தொகை கணக்கெடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

செய்யாறு வட்டாட்சியா் அலுவலகம் அருகே தொடங்கிய ஊா்வலத்தை வட்டாட்சியா் அசோக்குமாா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். தொடா்ந்து, விழிப்புணா்வு ஊா்வலம் ஆற்காடு சாலை, அனுமந்தப்பேட்டை வழியாகச் சென்று பேருந்து நிலையம் அருகே முடிவடைந்தது. இதில், மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மக்கள்தொகை கணக்கெடுப்பையொட்டி, வெள்ளிக்கிழமை முதல் வரும் 31-ஆம் தேதி வரை சுய விவர கணக்கெடுப்பு பணிகளும், ஆக.1 முதல் 30-ஆம் தேதி வரை வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்புப் பணிகளும் நடைபெற உள்ளதாக வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.

நிகழ்ச்சியில் வருவாய், காவல் துறை, ஆசிரியா்கள், பள்ளி மாணவா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.