சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!24,300 புள்ளிகளை கடந்த நிஃப்டி, சென்செக்ஸ் 965 புள்ளிகள் உயர்வு!!சென்னையில் வெளுத்து வாங்கும் பலத்த மழை! எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்! கால நீட்டிப்பு இல்லை! அமெரிக்காவுக்குப் பதிலடி! வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவிப்பு! ஹோர்முஸ் நீரிணையில் பிரிட்டிஷ் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்!எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்!நீட் தேர்வு முடிவுகள்: மனநல ஆலோசனைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்!தமிழ்நாடு முழுவதும் 50 டெண்டர்கள் ரத்து! முதல்வர் விஜய் அதிரடி!
/

நான் பதிவு செய்துள்ளேன்! - மக்கள்தொகை கணக்கெடுப்பு பற்றி விடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்!

மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து தமிழக முதல்வர் விஜய் வெளியிட்ட விடியோ...

News image

மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து முதல்வர் விஜய் வெளியிட்ட விடியோவில்... - Instagram/cmo tamilnadu

Updated On :17 ஜூலை 2026, 5:21 pm IST

தமிழ்நாட்டில் தொடங்கியுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் விடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் இன்று (ஜூலை 17) தொடங்கியுள்ளன. இணையவழி மூலம் மக்கள்தொகை கணக்கெடுப்பில் சுயமாகப் பதிவு செய்யும் வசதி புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் துவங்கியுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்தும், தனிநபர்கள் சுயமாகப் பதிவு செய்யும் வசதி குறித்தும் தமிழக முதல்வர் விஜய் விடியோ வெளியிட்டுள்ளார்.

இதுபற்றி, தமிழக முதல்வரின் அலுவலகம் வெளியிட்டுள்ள விடியோவில்,

“அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம்!

நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. இது வெறும் எண்ணிக்கை இல்லை, நீங்கள் வழங்கும் தகவல்கள்தான் எல்லா திட்டங்களுக்குமான அடிப்படையாகும். எனவே, ஒவ்வொரு குடும்பமும் உண்மையான தகவல்களைக் கொடுங்கள்.

இணையவழியில் சுய கணக்கெடுப்பு (Self Enumeration) செய்யலாம் – நான் பதிவு செய்துள்ளேன்!

உங்கள் தகவல்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும். வாங்க, எல்லோரும் சேர்ந்து இதை வெற்றிகரமாகச் செய்து முடிப்போம். மக்கள் நலனுக்காக மக்கள்தொகை கணக்கெடுப்பு! வணக்கம்!” எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த விடியோவில் தலைமைச் செயலக அலுவலகத்தில் இருந்தபடி மடிக்கணிணி மூலம் முதல்வர் விஜய் இணையவழியில் சுய கணக்கெடுப்பைப் பதிவு செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Summary

TN CM Vijay has issued an announcement via video regarding the online census.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.