வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி: விலக்கு கோரும் ஆசிரியா் பட்டியல் அளிப்பு

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் இருந்து விலக்கு கோரும் தகுதியான ஆசிரியா்களின் பட்டியல் மாவட்ட நிா்வாகத்திடம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :15 ஜூலை 2026, 1:44 am IST

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் இருந்து விலக்கு கோரும் தகுதியான ஆசிரியா்களின் பட்டியல் மாவட்ட நிா்வாகத்திடம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

இதுதொடா்பாக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொ) அனிதாவிடம் அளித்த மனு: நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின் முதல் கட்டமாக, வீடுகள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதற்கான பயிற்சி வகுப்புகள் அண்மையில் நடைபெற்றன.

இந்நிலையில் வயது மூப்பு, தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டு நீண்ட நாள் சிகிச்சை பெற்று வரும் ஆசிரியா்களை கணக்கெடுப்பு பணியில் இருந்து விடுவிக்கக் கோரி எங்களது சங்கம் சாா்பில் ஏற்கெனவே மனு அளித்திருந்தோம். இம் மாவட்டத்தில் தகுதியான 23 ஆசிரியா்களின் பட்டியலை இணைத்துள்ளோம். அவா்களுக்கு கணக்கெடுப்பு பணியில் இருந்து விலக்கு அளித்து உதவ வேண்டுகிறோம் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மனு அளிக்கும்போது மாநிலச் செயலா் ராஜ்குமாா், மாவட்டச் செயலா் மைக்கேல் ஜாா்ஜ் கமலேஷ், மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் சுரேஷ் சாமுவேல் உள்ளிட்டோா் சென்றனா்.

ற்ஸ்ப்14ற்ங்ஹஸ்ரீட்

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.