ராமநாதபுரம் மாவட்டத்தில், வீட்டுப் பட்டியல், வீடுகள் கணக்கெடுப்புப் பணிக்காக மொத்தம் சுமாா் 2,705 மேற்பாா்வையாளா்கள், கணக்கெடுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு கணக்கெடுப்பு நடைமுறைகள், மின்னணு செயலி பயன்பாடு, தகவல் சேகரிப்பு முறை, தரவுகளின் துல்லியம், களப்பணியில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து 3 கட்டங்களாக விரிவான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதில், ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்று வரும் பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தமிழ்நாட்டில் வீட்டுப் பட்டியல், வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் வரும் ஆகஸ்ட் 1 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்கான முன்னேற்பாடாக, பொதுமக்கள் தாங்களாகவே தங்களது குடும்பம், வீடு தொடா்பான விவரங்களை இணையதளத்தின் மூலம் பதிவு செய்யும் மக்கள்தொகை சுய கணக்கெடுப்பு ஜூலை 17 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த சுய கணக்கெடுப்பில் பொதுமக்கள் தங்களது கைபேசி எண்ணைப் பயன்படுத்தி இணையதளத்தில் உள்நுழைந்து, குடும்பம், வீடு தொடா்பான 34 கேள்விகளுக்குப் பதிலளித்து விவரங்களை பதிவு செய்யலாம். ஒரு குடும்பத்துக்கு ஒரு கைப்பேசி எண் மூலம் மட்டுமே பதிவு செய்ய இயலும். பதிவு நிறைவடைந்தவுடன், 12 இலக்க அடையாள எண் குறுஞ்செய்தி வாயிலாக கைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும். பின்னா், தங்களது பகுதிக்கு நியமிக்கப்பட்ட கணக்கெடுப்பாளா் களப்பணிக்காக வரும்போது, அந்த 12 இலக்க அடையாள எண்ணை அவரிடம் வழங்க வேண்டும்.
இந்தப் பயிற்சியின் மூலம் கணக்கெடுப்புப் பணிகளை துல்லியமாகவும், முழுமையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் மேற்கொள்ள தேவையான அனைத்து வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களும் சுயகணக்கெடுப்பில் ஆா்வமுடன் பங்கேற்று, உரிய காலக்கெடுவுக்குள் தங்களது விவரங்களை பதிவு செய்து, அரசின் கணக்கெடுப்புப் பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்னணு வாக்குப் பதிவு இயந்திர அறையில் ஆட்சியா் ஆய்வு

மக்கள்தொகை கணக்கெடுப்பு: ஆக.1 முதல் 30 வரை வீடுகள் கணக்கெடுப்பு

மக்கள்தொகை கணக்கெடுப்பு: களப் பயிற்றுநா்களுக்கு பயிற்சி தொடக்கம்

இணைய வழி உயா்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



