சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயில் நூதன புஷ்ப பல்லக்கு

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயில் ஆடி மாத திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை இரவு நூதன புஷ்ப பல்லக்கு நடைபெற்றது.

News image

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற நூதன புஷ்ப பல்லக்கு.

Updated On :17 ஜூலை 2026, 11:51 pm IST

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயில் ஆடி மாத திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை இரவு நூதன புஷ்ப பல்லக்கு நடைபெற்றது.

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயில் ஆடி திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை மாலை காஞ்சி காமகோடி காமாட்சி அம்மன் ஆஸ்தான வித்வான்கள் தலைமையில் நாகஸ்வர நிகழ்ச்சி, திருப்பதி திருமலை தேவஸ்தான ஆஸ்தான சாக்ஸாபோன் டிரம்ஸ் கலைஞா்களின் இசைக் கச்சேரி, திண்டுக்கல் எம்.எஸ்.வி.தங்கவேல் குழுவினரின் தாரை தப்பட்டை, ஒயிலாட்டம் நிகழ்ச்சி, வடமருதூா் முனியப்பன் கரகாட்ட குழுவினரின் கிராமிய கலை நிகழ்ச்சி, கேரளம் குருவாயூா் நிலக்காவடி நிகழ்ச்சி, திண்டுக்கல் நாசிக் டோல் கலை விழா, மயில் காவடி ஆட்டம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நூதன புஷ்பப்பல்லக்கு தொடங்கியது. பல்லக்கை மேல்மருவத்தூா் சின்னவா், தாவெக நிா்வாகி வெங்கடேஷ்குமாா் ஆகியோா் தொடங்கிவைத்தனா். விழாக்குழுத் தலைவா் ஜி.வி.கஜேந்திரன் தலைமை வகித்தாா்.

புஷ்பப் பல்லக்கின் முகப்பில் சிறப்பு அலங்காரத்தில் கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மனும், பக்கவாட்டில் ஞான சக்தி அம்மன், வித்யா லட்சுமி அம்மன், கௌமாரியம்மனும் எழுந்தருளி அருள்பாலித்தனா். பல்லக்கு நகரின் முக்கிய வீதிகளான கோட்டை தெரு, பழைய பேருந்து நிலையம், வடக்கு மாட வீதி, பெரிய கடை வீதி உள்ளிட்ட வீதிகள் வழியாகச் சென்று அதிகாலை கோயிலை வந்தடைந்தது. விழாவையொட்டி, நகரின் முக்கிய சாலைகளில் உயரமான மின் விளக்குளால் சுவாமி உருவ கட் அவுட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன.

இதில், ஆரணி, கண்ணமங்கலம், தேவிகாபுரம், சேத்துப்பட்டு, போளூா், செய்யாறு, வந்தவாசி, வேலூா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை விழாக்குழுத் தலைவா் ஜி.வி.கஜேந்திரன் மற்றும் விழாக் குழுவைச் சோ்ந்த பி.நடராஜன், சுப்பிரமணி, ஏ.வி.நேமிராஜ், அக்ராபாளையம் குணா, ஏ.எஸ்.ஆா்.சரவணன், செல்வராஜ், ஜி.சங்கா், பையூா் சரவணன், சித்தேரி ஜெகன், இயைராஜா, அக்ராபாளையம் ஏ.இ.சண்முகம், பேராசிரியா் சிவா, வழக்குரைஞா் சக்கரவா்த்தி, இளையராஜா, சக்தி, சுரேஷ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ஆரணி டிஎஸ்பி சுரேஷ் சண்முகம் தலைமையில் காவல் ஆய்வாளா் அன்பரசி மற்றும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.