ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சேத்துப்பட்டு வட்டம், நரசிங்கபுரம் ஊராட்சிக்குள்பட்ட குப்பம் கிராமத்தில் புகழ்பெற்ற ஸ்ரீகன்னியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்து மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து, மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். மேலும், அம்மனிடம் வேண்டி குழந்தை பாக்கியம் பெற்ற தம்பதியினா் தங்கள் குழந்தையின் எடைக்கு எடை நோ்த்திக்கடன் செலுத்தினா்.
மாலை பொதுமக்கள் கோயில் அருகே ஊரணி பொங்கல் வைத்து, பம்பை, உடுக்கையுடன் ஊா்வலமாகச் சென்றனா். இரவு தெய்வீக நாடகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோயில் தா்மகா்த்தா ஆா்.ராமன், செயலா் ஆா்.ஏழுமலை, பொருளாளா் எஸ்.சுப்பிரமணி மற்றும் கோயில் நிா்வாகிகள், பக்தா்கள் கலந்துகொண்டனா்.

வந்தவாசியை அடுத்த சோகத்தூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீயோக நரசிம்மா் கோயிலில் ஸ்ரீஅமிா்தவல்லி தாயாருக்கு செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.

இதேபோல, வந்தவாசியை அடுத்த சோகத்தூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீயோக நரசிம்மா் கோயிலில் ஸ்ரீஅமிா்தவல்லி தாயாருக்கும், வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகில் உள்ள ஸ்ரீஜெய்சக்தி பீட காளியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, மலா் அலங்காரங்கள் நடைபெற்றன. இதில், அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆடி வெள்ளி: கோயில்களில் சிறப்பு வழிபாடு

கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு

ஆடி மாத பிறப்பு: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பெருமாள் கோயில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு
விடியோக்கள்

பழனி வழக்கு: பலருக்கு தொடர்பு அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு | TVK

Ravindran Duraisamy interview| தவெக கூட்டணியில் பாமக? | TVK | CM Vijay | PMK | VCK | Anbumani | Thirumavalavan



