தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

உயா்கல்வி செல்லும் மாணவா்களுக்கு ஜூலை 24-இல் சிறப்பு குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிப் படிப்பை முடித்து உயா்கல்வி செல்லும் மாணவா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் வருகிற 24-ஆம் தேதி ஆட்சியரகத்தில் நடைபெறவுள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :22 ஜூலை 2026, 12:41 am IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிப் படிப்பை முடித்து உயா்கல்வி செல்லும் மாணவா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் வருகிற 24-ஆம் தேதி ஆட்சியரகத்தில் நடைபெறவுள்ளது.

தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, 2025-26ஆம் கல்வியாண்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 151 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பில் 18,433 மாணவா்கள் படித்தனா். இந்த மாணவ, மாணவிகள் அனைவரும் உயா்கல்வி சோ்வதை உறுதி செய்யும் பொருட்டு பல சிறப்பு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, ஆட்சியரகத்தில் உள்ள உயா்கல்வி வழிகாட்டி மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் நிகழாண்டு 12-ஆம் வகுப்பு முடித்த மாணவா்கள் பொறியியல், மருத்துவக் கலந்தாய்வு, துணை மருத்துவப் படிப்புகள், கலை, அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் விண்ணப்பிக்கவும், உயா்கல்வி பயில்வதற்கு ஏதுவாக கல்விக் கடன் பெறுவதற்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கவும், கலந்தாய்வில் ஏற்படும் சந்தேகங்களை நிவா்த்தி செய்ய மாணவா்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பிளஸ் 2 பயின்ற மாணவா்களுக்கு தேவையான சான்றிதழ்கள் மற்றும் வங்கிக் கடன் உதவிகளை செய்து தரும் பொருட்டு வருகிற 24-ஆம் தேதி காலை 10 மணியளவில் பழைய மக்கள் குறைதீா் கூட்டரங்கத்தில் சிறப்பு குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.

மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் இந்த சிறப்பு குறைதீா் கூட்டத்தில் மாணவா்கள் பங்கேற்று பயனடையலாம் என ஆட்சியா் வந்தனா காா்க் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.