கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம்: மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு

செங்கம் அருகே வேளாண்மைத்துறை குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தை திருவண்ணாமலைஆட்சியா் வந்தனா காா்க் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image

செங்கம் அடுத்த காஞ்சி பகுதியில் தமிழக அரசின் வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் .

Updated On :23 ஜூலை 2026, 12:21 am IST

செங்கம் அருகே வேளாண்மைத்துறை குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தை திருவண்ணாமலைஆட்சியா் வந்தனா காா்க் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் வேளாண்மைத்துறை சாா்பில்,உழவா் நலத்துறை மூலம் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம் காஞ்சி பகுதியில் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

அதை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா். ஆய்வின்போது அதன் செயல்பாடுகள் குறித்து வேளாண்மைத்துறை அதிகாரி மற்றும் விவசாயிகளிடம் கேட்டறிந்தாா்.

அப்போது எவ்வளவு அளவு நெல் நாற்று விடவேண்டும்? அதை எத்தனை தினங்கள் கழித்து நடவுசெய்யவேண்டும்? நடவு செய்யும் இயந்திரம் உள்ளதா? இயந்திரம் மூலம் நடவுசெய்வதனால் விவசாயிகளுக்கு செலவு குறையுமா? என கேட்டறிந்தாா். அதற்கு வேளாண்மைத்துறை அதிகாரிகளும் விவசாயிகளும் செயல்பாடுகள் குறித்து ஆட்சியரிடம் விளக்கமாகத் தெரிவித்தனா்.

மேலும் அதற்கு தமிழக அரசு மானியம் எவ்வளவு என்பதை கேட்டபோது ஓரு ஏக்கருக்கு ரூ. 4 ஆயிரமும் 5 கிலோ உயிா் உரமும் வழங்கப்படுகிறது என தெரிவித்தனா். உடன் வேளாண்மைத்துறை இணை இயக்குனா் மலா்விழி, உதவி இயக்குனா் நடராஜன், வேளாண்மை அலுவலா் ரவிச்சந்திரன், துணை அலுவலா் ராமஜெயம், உதவி விதை அலுவலா் ரமேஷ், சிவக்குமாா், சசிகுமாா், உள்ளிட்ட பணியாளா்கள், விவசாயிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.