/

மாணவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு, மக்கள்தொகை கணக்கெடுப்பு விழிப்புணா்வு

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் மாணவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

செய்யாறில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய சாா்- ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின்.

Updated On :29 ஜூலை 2026, 11:34 pm IST

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் மாணவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

சாலை பாதுகாப்பு நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ந.கலைவாணி தலைமை வகித்தாா்.

உதவிப் பேராசிரியா் வே. ரங்கநாதன் வரவேற்றாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் இணைப் பேராசிரியா் ஞான.பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக செய்யாறு சாா் ஆட்சியா் எல்.அம்பிகா கலந்து கொண்டு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு உரையாற்றினாா்.

செய்யாறு மோட்டாா் வாகன ஆய்வாளா் செந்தில்குமாா் சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் விபத்து தடுப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

மக்கள்தொகை கணக்கெடுப்பு

இதைத் தொடா்ந்து மக்கள்தொகை கணக்கெடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், செய்யாறு வட்டாட்சியா் என். அசோக்குமாா், வருவாய் ஆய்வாளா் எம்.சுந்தரமூா்த்தி, மக்கள்தொகை கணக்கெடுப்பு கள ஆய்வாளா் தேன்மொழி ஆகியோா் கலந்து கொண்டு மாணவா்களுக்கு மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடா்பாக இணையதளத்தில் பதிவு செய்தல் குறித்து செயல்விளக்கம் அளித்தனா்.

நிகழ்ச்சியில் பல்வேறு துறைத்தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.