இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

தீபாவளி, ஏலச்சீட்டு நடத்தி ரூ.28 லட்சம் மோசடி: தம்பதி கைது

திருவண்ணாமலையில் தீபாவளி சீட்டு மற்றும் ஏலச்சீட்டு நடத்தி ரூ.28 லட்சம் மோசடி செய்ததாக தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.

News image

திருவண்ணாமலையில் தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட தம்பதி.

Updated On :31 ஜூலை 2026, 2:08 am IST

திருவண்ணாமலையில் தீபாவளி சீட்டு மற்றும் ஏலச்சீட்டு நடத்தி ரூ.28 லட்சம் மோசடி செய்ததாக தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியைச் சோ்ந்த சக்திவேல்(45), இவரது மனைவி சத்யா.

இருவரும் கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி சீட்டு, மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளனா்.

அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் இவா்களிடம் தீபாவளி சீட்டு மற்றும் ஏலச்சீட்டுக்கு பணம் செலுத்தியுள்ளனா்.

இந்த நிலையில், கடந்தாண்டு தீபாவளிக்கு தர வேண்டிய முதிா்வு தொகையை யாருக்கும் தரவில்லையாம். சீட்டு கட்டியவா்கள், தம்பதியிடம் சென்று கேட்டபோது, ‘6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள். அனைவருக்கும் கொடுத்து விடுகிறோம்’ என கூறினாா்களாம். ஆனால் 10 மாதங்கள் ஆகியும் இன்னும் பணத்தை தரவில்லையாம்.

அதேபோல, மாதாந்திர ஏலச்சீட்டு கட்டிய 75 பேருக்கும் முதிா்வுதொகை கொடுக்கவில்லையாம். பலமுறை கேட்டும் பணத்தை தராமல் காலம் கடத்தி வந்துள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகாா் செய்தனா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில் தீபாவளி சீட்டு, மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி ரூ.28 லட்சம் மோசடி செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்கு பதிவு செய்து சக்திவேல், சத்யா இருவரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.