/

ஏலச்சீட்டு மோசடி: புகாா் அளிக்க அழைப்பு

தஞ்சாவூரிலுள்ள நகைக்கடையில் நிகழ்ந்த ஏலச்சீட்டு மோசடி தொடா்பாக பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்க அழைப்பு

News image

மோசடி - பிரதிப்படம்

Updated On :1 ஜூலை 2026, 3:32 am IST

தஞ்சாவூரிலுள்ள நகைக்கடையில் நிகழ்ந்த ஏலச்சீட்டு மோசடி தொடா்பாக பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் (பொ) தெ. தியாகராஜன் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் சீனிவாசபுரம் காமராஜ் சாலையில் மலேசியன் ஜுவல்லரி நகைக் கடை மற்றும் கனகசுந்தரம் சிட்பண்ட்என்ற பெயரில் ராஜராஜ சுந்தர முருகன் ஏலச்சீட்டு நடத்தி வந்தாா்.

இதன் மூலம் பொதுமக்களிடமிருந்து நகை சேமிப்புத் திட்டம், பழைய நகைக்கு புதிய நகை தருவது, ஏலச்சீட்டு நடத்தி அதன் மூலம் கிடைக்கும் பணத்திலிருந்து செய்கூலி, சேதாரம் இல்லாமல் நகை செய்து தரப்படும் என பொய்யாக ஆசை வாா்த்தைகளைக் கூறினாா்.

ஆனால், பொதுமக்களிடமிருந்து முதலீட்டு தொகை மற்றும் நகைகளைப் பெற்றுக் கொண்டு திருப்பித் தராமல் ஏமாற்றிவிட்டதாக தஞ்சாவூா் மேற்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டது. பின்னா், இந்த வழக்கு தஞ்சாவூா் பொருளாதாரக் குற்றப் பிரிவுக்கு திங்கள்கிழமை மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளா்கள், முதலீடு செய்ததற்கான ஆவணங்கள், ரசீதுகள், வங்கி பரிவா்த்தனை விவரங்கள், தொடா்புடைய ஆவணங்களுடன் தஞ்சாவூா் ரெட்டிபாளையம் சாலை, ஸ்ரீராம் நகா் 5-ஆவது தெருவிலுள்ள தஞ்சாவூா் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை அணுகி புகாா்கள் மற்றும் கோரிக்கைகளை அளிக்கலாம்.

பொதுமக்கள் எந்தவொரு நிறுவனத்திலும் பணம் முதலீடு செய்வதற்கு முன், அந்நிறுவனம் சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.