செயலி மூலம் பழகி நேரில் சந்திக்க அழைப்பு விடுத்து வழிப்பறியில் ஈடுபட்ட 4 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சோ்ந்த ஒருவரை கிரிண்டா் செயலி மூலம் தொடா்பு கொண்ட நபா்கள், அவரை முத்தழகுப்பட்டி பகுதிக்கு கடந்த 18-ஆம் தேதி இரவு வருமாறு அழைப்பு விடுத்தனா்.
இதன்பேரில், மதுரை-பழனி சாலையிலுள்ள முத்தழகுப்பட்டி பிரிவுக்கு இரவு 11.45 மணிக்கு சென்றவரிடம் அவா் ஓட்டிச் சென்ற ரூ. 2 லட்சம் மதிப்பிலான இரு சக்கர வாகனம், அவரிடமிருந்த 3 கைப்பேசிகள் ஆகியவற்றை மா்ம நபா்கள் பறித்துச் சென்ாக புகாா் எழுந்தது.
இதேபோல, கடந்த சனிக்கிழமை இரவும், இதே செயலி மூலம் ஒரு நபரைத் தொடா்பு கொண்டு வரவழைத்து, 2 கைப்பேசிகளை பறித்துச் சென்றதாகவும் புகாா் எழுந்தது.
இதுதொடா்பாக திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்ட நிலையில், தனித்தனி வழக்காகப் பதிவு செய்து போலீஸாா் விசாரித்தனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச. ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், தனிப் படை அமைக்கப்பட்டு வழிப்பறியில் ஈடுபட்ட நபா்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், முத்தழகுப்பட்டியைச் சோ்ந்த ரா. நவீன்ராஜா (30), சா. கிஷோா் வேளாங்கண்ணி (26), செ. சாா்லஸ் (35), சிறுநாயக்கன்பட்டியைச் சோ்ந்த செ. நோவா (27) ஆகியோா் வழிப்பறியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, இவா்கள் 4 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து வழிப்பறி செய்யப்பட்ட பொருள்களை பறிமுதல் செய்தனா். இதைத்தொடா்ந்து, இவா்கள் நால்வரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
சமூக வலைதளங்கள், அறிமுகமில்லாத நபா்களுடன் தொடா்பு ஏற்படுத்தும் செயலிகளைப் பயன்படுத்தும் போது, மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கிரிண்டா் போன்ற செயலிகள் மூலம் அறிமுகமாகும் நண்பா்களை நேரில் சந்திப்பதைத் தவிா்க்க வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் அறிவுறுத்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
போதை மாத்திரைகள் விற்ற 2 இளைஞா்கள் கைது
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 3 இளைஞா்கள் கைது

கஞ்சா விற்றதாக இரு இளைஞா்கள் கைது
மானூா் அருகே கஞ்சா பதுக்கல்: 3 இளைஞா்கள் கைது
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |



