நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

போதை மாத்திரைகள் விற்ற 2 இளைஞா்கள் கைது

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 2 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :17 ஜூன் 2026, 3:06 am IST

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 2 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் மாரியப்பன் தலைமையில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அரியமங்கலம் பகுதியிலுள்ள தனியாா் வணிக வளாகம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இளைஞா்கள் இருவரைப் பிடித்து விசாரித்தனா். இதில் அவா்கள், காட்டூா் பா்மா காலனியைச் சோ்ந்த அ. அந்தோணி அா்னால்டு (18), துவாக்குடி தெற்கு மலை பகுதியைச் சோ்ந்த எஸ். ராம்குமாா் (20) என்பதும், இருவரும் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ.30 ஆயிரம் மதிப்பிலான 100 போதை மாத்திரைகள், போதை ஊசிகள், திரவ போதை மருந்துகள், கைப்பேசி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.