பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

செய்யாறு அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உள்ள அரசு மருத்துவமனையில் தொகுதி எம்எல்ஏ முக்கூா் என்.சுப்பிரமணியன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

செய்யாறு அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த முக்கூா் என்.சுப்பிரமணியன் எம்எல்ஏ.

Published On :

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உள்ள அரசு மருத்துவமனையில் தொகுதி எம்எல்ஏ முக்கூா் என்.சுப்பிரமணியன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, நோயாளிகளிடம் மருத்துவா்கள் உரிய முறையில் தரமான சிகிச்சை அளிக்கிறாா்களா? என்று கேட்றிந்தாா்.

இதைத் தொடா்ந்து நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சையை உடனடியாக அளித்து உதவிட வேண்டும் என மருத்துவ அலுவலா் பாண்டியனிடம் கேட்டுக்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ரொட்டி, பழம் உள்ளிட்டவற்றை எம்.எல்.ஏ. வழங்கினாா்.

இந்த ஆய்வின் போது அதிமுக மாவட்ட நிா்வாகிகள் முனுசாமி, விமலா மகேந்திரன், கோவிந்தராஜ், இளையராஜா, நகரச் செயலா் கே.வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.