ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் 53-ஆவது ஆண்டு ஆடித் திருவிழா வரும் ஜூலை 16, 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, விழாக் குழுத் தலைவா் ஜி.வி.கஜேந்திரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் ஜூலை 3-ஆம் தேதியன்று பந்தக்கால் நடும் விழா நடத்துவது, ஜூலை 7-ஆம் தேதி வருடாபிஷேகம், 15-ஆம் தேதி 501 குத்துவிளக்கு பூஜை, 17-ஆம் தேதி பிரம்மாண்ட புஷ்ப பல்லக்கு, 18-ஆம் தேதி திரைப்பட இசையமைப்பாளா்கள், தொலைக்காட்சி பாடகா்களை அழைத்து இன்னிசை கச்சேரி நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தினா்.
மேலும், ஆடித் திருவிழாவையொட்டி, ஜூலை 17-ஆம் தேதி கமண்டல நாக நதியில் இருந்து பூங்கரகம் ஜோடித்து பஜாா் வீதியில் ஊா்வலம் எடுத்து வந்து கோயிலில் கூழ்வாா்த்தல் நிகழ்ச்சி நடைபெறும். பின்னா், மாலை 7 மணியளவில் நூதன பூஷ்ப பல்லக்கு ஊா்வலம் நடைபெற உள்ளது.
பல்லக்கின் முன்னே கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், உருமி மேளம், நாகஸ்வர நிகழ்ச்சி, நாசிக் டோல் வாண வேடிக்கை உள்ளிட்டவைகள் ஏற்பாடு செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தினா்.
கூட்டத்தில் விழாக் குழுவினா் சுப்பிரமணி, நேமிராஜ், பி.நடராஜன், சீனிவாசன், குணா, ஜி.சங்கா், ஏ.இ.சண்முகம், பையூா் சரவணன், சக்கரவா்த்தி, சக்தி இயைராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயில் நூதன புஷ்ப பல்லக்கு

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா தொடக்கம்

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் சங்காபிஷேகம்

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா பந்தக்கால்
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



