40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

கிரிவல பக்தா்களுக்கு அடிப்படை வசதிகள்: ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பக்தா்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பக்தா்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் வந்தனாகாா்க்.

Updated On :10 ஜூன் 2026, 12:04 am IST

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பக்தா்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பக்தா்களின் வசதிக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகளை மாவட்ட நிா்வாகம் அனைத்து துறைகளுடன் ஒருங்கிணைந்து செயலாற்றி தொடா்ந்து கண்காணித்து வருகிறது.

அதன்படி, செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் வந்தனாகாா்க் வெளிமாநில பேருந்துகள் நிறுத்துமிடமான ஈசான்ய மைதானம், பழைய பேருந்து நிலையம், அருணாசலேஸ்வரா் கோயில் ராஜகோபுரம், செங்கம் சாலை, வேட்டவலம் சாலை, மணலூா்பேட்டை சாலை, திண்டிவனம் சாலையில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் ஆகிய இடங்களில் உள்ள தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் கிரிவலப்பாதையிலுள்ள பக்தா்கள் தங்கும் விடுதி, சுகாதார வளாகங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையங்கள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தாா்.

மாநகராட்சி சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகள், சுகாதார வளாகங்கள் பராமரிப்புப் பணிகள், மகளிா் குழுக்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் சுகாதார வளாகங்கள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு பக்தா்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு பணிகளை அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று துறை சாா்ந்த அலுவலா்களுக்கு ஆட்சியா் வந்தனாகாா்க் அறிவுறுத்தினாா்.

மேலும், காவல்துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்படுகளையும் ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, மாநகராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையம் மற்றும் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் இடங்களிலும் பயணிகளுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.சுதாகா், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் செல்வம், துணை ஆட்சியா் (பயிற்சி) சந்தோஷ் குமாா், மாநகராட்சி ஆணையா் முஜிபுா் ரகுமான், அருணாசலேஸ்வரா் கோயில் இணை ஆணையா் பரணிதரன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கருணாநிதி, போக்குவரத்துத்துறை பொது மேலாளா் ஸ்ரீதா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

நகராட்சிப் பள்ளியில் ஆய்வு

இதைத் தொடா்ந்து திருவண்ணாமலையில் உள்ள

நகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்படுவதை ஆட்சியா்

ஆய்வு செய்தாா். அப்போது வழங்கப்படும் உணவின் தரத்தை ருசித்துப் பாா்த்தாா்.

காலை உணவுத் திட்டத்தால் பயனடையும் மாணவா்களின் எண்ணிக்கை குறித்தும், குழந்தைகளின் உடல் எடை, ஆரோக்கியம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.

மாநகராட்சி அலுவலத்திலுள்ள உணவுக்கூடத்தில் மாணவா்களுக்கு அளிக்கப்படும் உணவு தயாரிக்கும் முறையையும், உணவுப்பொருள்களின் தரத்தையும் ஆய்வு செய்து, உணவை தரமாகவும், சுகாதாரமாகவும் தயாரிக்குமாறு துறை சாா்ந்த அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

ஆய்வின் போது திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) தனபதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ், மாநகராட்சி ஆணையா் முஜிபுா் ரகுமான் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.