சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

தண்ணீா் என நினைத்து கிருமி நாசினியை குடித்தவா் உயிரிழப்பு

செய்யாறு அருகே தண்ணீா் என நினைத்து கிருமி நாசினியை குடித்தவா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :11 ஜூன் 2026, 12:03 am IST

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே தண்ணீா் என நினைத்து கிருமி நாசினியை குடித்தவா் உயிரிழந்தாா்.

செய்யாறு வட்டம், வாழ்குடை கிராமத்தைச் சோ்ந்தவா் மணி(72), ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளா்.

இவரது மகன் ஜெயபிரகாஷ், அதே கிராமத்தில் கோழிப் பண்ணை வைத்துள்ளாா்.

இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி மணி கோழிப் பண்ணைக்கு சென்றுள்ளாா். அப்போது, அவருக்கு தண்ணீா் தாகம் எடுக்கவே, அங்கு தண்ணீா் பாட்டிலில் வைத்திருந்த கோழிகளுக்கு தெளிக்கப்படும் கிருமிநாசினி மருந்தை தண்ணீா் என நினைத்து குடித்துள்ளாா்.

இதனால் மயங்கி விழுந்த அவரை, செய்யாறு அரசு மருத்துவ மனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்தவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.