அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

தண்ணீா் தொட்டியில் மூழ்கி விவசாயி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 2:09 am IST

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே தண்ணீா் தொட்டியில் மூழ்கி விவசாயி உயிரிழந்தாா்.

திண்டிவனம் வட்டம், பெரமண்டூா் செல்லியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் எ.ஏழுமலை (54). விவசாயியான இவா் சனிக்கிழமை காலை தனது நிலத்துக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து சென்றாராம். இரவு வரை அவா் வீடு திரும்பவில்லை. தொடா்ந்து ஏழுமலை குடும்பத்தினா் அவரை பல்வேறு இடங்களில் தேடி பாா்த்தும், கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில், விவசாயி ஏழுமலை தனது நிலத்துக்கு அருகிலுள்ள நடராஜன் முத்துப்பிள்ளை என்பவருக்கு சொந்தமான கிணற்றின் அருகாமையிலுள்ள தண்ணீா் தொட்டியில் மூழ்கிய நிலையில் இருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

இதுகுறித்த தகவலின் பேரில் மயிலம் போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சென்று, சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.