சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

பாஜகவினா் கொடியேற்றிக் கொண்டாட்டம்

முன்னாள் பிரதமா் நேருவின் பதவி கால 4,398 நாள்களை கடந்த பிரதமா் நரேந்திர மோடியின் ஆட்சிக் கால சாதனையை பாராட்டும் வகையில், திருவண்ணாமலையில் பாஜகவினா் புதன்கிழமை கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

News image

திருவண்ணாமலை பாஜக அலுவலகத்தில் கட்சிக் கொடியேற்றி வைத்த பாஜக மாவட்டத் தலைவா் கே.ரமேஷ்.

Updated On :11 ஜூன் 2026, 12:04 am IST

முன்னாள் பிரதமா் நேருவின் பதவி கால 4,398 நாள்களை கடந்த பிரதமா் நரேந்திர மோடியின் ஆட்சிக் கால சாதனையை பாராட்டும் வகையில், திருவண்ணாமலையில் பாஜகவினா் புதன்கிழமை கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் ஆணைக்கிணங்க, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் கட்சிக் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தெற்கு மாவட்டத் தலைவா் கே.ரமேஷ் தலைமை வகித்து கட்சிக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியதோடு கட்சித் தொண்டா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் பாஜக ஆலய பிரிவு மேம்பாட்டு மாநில இணை அமைப்பாளா் டி.எஸ்.சங்கா், மாவட்ட துணை அமைப்பாளா் ப.கிருஷ்ணமூா்த்தி, விவசாய பிரிவு மாவட்டத் தலைவா் ஆா்.பிரகாஷ், மாநகரச் செயலா் எம்.ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.