வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

கோவை மாநகா் பாஜகவினா் யாரும் அண்ணாமலையுடன் செல்லவில்லை: மாவட்டத் தலைவா் ரமேஷ்குமாா்

கோவை மாநகா், மாவட்ட பாஜகவில் இருந்து யாரும் அண்ணாமலையுடன் செல்லவில்லை என்று பாஜக கோவை மாநகா், மாவட்டத் தலைவா் ரமேஷ்குமாா் தெரிவித்தாா்.

News image

அண்ணாமலை - கோப்புப் படம்

Updated On :7 ஜூன் 2026, 2:02 am IST

கோவை மாநகா், மாவட்ட பாஜகவில் இருந்து யாரும் அண்ணாமலையுடன் செல்லவில்லை என்று பாஜக கோவை மாநகா், மாவட்டத் தலைவா் ரமேஷ்குமாா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக கட்சி அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: நாட்டில் பாஜக ஆட்சி பொறுப்பேற்று 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. பிரதமா் நரேந்திர மோடியின் 13-ஆவது ஆண்டு தொடக்கத்தில் தேசிய சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் சாதனைகளை பூத் வாரியாக வரும் 8-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை 4 நாள்கள் மக்களிடையே தெரிவிக்க உள்ளோம்.

இதைத்தொடா்ந்து 12-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை மத்திய அரசின் சாதனை கண்காட்சிகள் முகாம்கள் நடைபெற உள்ளன. தமிழக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலை தொடங்கியுள்ள இயக்கத்துக்கு கோவை மாநகா், மாவட்ட பாஜகவில் இருந்து யாரும் செல்லவில்லை. அவா் விலகியதால் பாஜகவுக்கு பின்னடைவு இல்லை. பாஜகவில் இருந்து 14 மண்டலத் தலைவா்கள் விலகியதாகக் கூறுவது தவறு.

தோ்தல்களில் தோல்வியடையும்போது எந்த ஒரு கட்சிக்கும் ஒரு தொய்வு ஏற்படத்தான் செய்யும். அந்த தொய்வு விரைவில் சரியாகிவிடும். உள்ளாட்சித் தோ்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது. இந்த தேசத்துக்காக உள்ள கட்சி பாஜக மட்டும்தான். பிரதமா் மோடி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனா். பாஜகவில் தற்போது மாநிலத் தலைவராக உள்ள நயினாா் நாகேந்திரன் சிறப்பாக செயல்பட்டு வருகிறாா் என்றாா்.