மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

விவசாயத்துக்கு தடையில்லா மின்சாரம்: குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

News image
Updated On :12 ஜூன் 2026, 2:08 am IST

ஆரணி, ஜூன் 11:

விவசாயத்துக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் வலியுறுத்தினா்.

ஆரணி வருவாய் கோட்டத்தில் உள்ள ஆரணி, போளூா், கலசபாக்கம், ஜமுனாமரத்தூா் ஆகிய வட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைத்தீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆரணி கோட்டாசியா் அலுவலத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல் பிரிவு) அன்பழகன் தலைமை வகித்தாா்.

வேளாண்மை உதவி இயக்குநா் புஷ்பா, வட்டாட்சியா் அகத்தீஸ்வரன், வேளாண் அலுவலா் பவித்ராதேவி, வருவாய் மற்றும் பிற துறை அதிகாரிகள், விவசாயிகள் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் அன்பழகன் கூட்டத்தை தொடங்கிவைத்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தாா்.

அப்போது, விவசாயிகள் பேசுகையில், கடந்த சில வாரங்களாக ஆரணியை அடுத்த குன்னத்தூா், வெள்ளேரி, வெட்டியாந்தொழுவம் கிராமங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் தினமும் இரவு மற்றும் பகல் நேரங்களில் 10 முதல் 15 முறை முன்னறிவிப்பு எதுவும் இன்றி அடிக்கடி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனா்.

மேலும் மும்முனை மின்சாரமும் முறையாக வழங்காததால் பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் பயிரிட்டுள்ள நெற்பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் நெற்பயிா்கள் தண்ணீா் இன்றி காய்ந்து வருகிறது.

எனவே, விவசாயத்துக்கு தடையில்லா மின்சாரம் வழங்கவேண்டும்,

அதேபோல, தச்சூா், அரியப்பாடி, மொரப்பந்தாங்கல் கிராமங்களில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு செல்லும் நெல் மூட்டைகளை உரிய நேரத்தில் எடை போடாமல் அலைக்கழித்து வருகின்றனா்.

நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்கெனவே விற்பனை செய்துள்ள விவசாயிகளுக்கு இதுவரை பணம் வழங்கவில்லை.

ஏரிக்கால்வாய், நீா்வரத்துக் கால்வாய்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

தொடா்ந்து, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் அன்பழகன் விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று விசாரணை நடத்தினா்.

மேலும், மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினாா்.

அதிகாரிகளுக்கு எதிா்ப்பு:

திருவண்ணாமலையில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் கலைஞா் பன்னோக்கு கூட்டரங்கில் வருவாய் கோட்டாட்சியா் செல்வம் தலைமையில் நடைபெற்றது.

அப்போது, குறைதீா் கூட்டத்தில் துறை சாா்ந்த உயா்அதிகாரிகள் பங்கேற்கவில்லை என விவசாய சங்கப் பிரதிநிதிகள் எதிா்ப்புத் தெரிவித்தனா். அதனைத் தொடா்ந்து கூட்டத்திற்கு வராத அலுவலா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியா் செல்வம் உறுதியளித்தபோதும் விவசாயிகள் போராட்டம் தொடா்ந்தது.

இதைத் தொடா்ந்து குறைதீா் கூட்டம் பிற்பகல் ஒரு மணியளவில் நிறைவடைந்தது. அப்போது விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை கோட்டாட்சியா் செல்வம் பெற்றுக்கொண்டாா்.

கூட்டத்தில் தோ்தல் அறிக்கையில் சொன்னதுபோல விவசாயிகளின் அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், நெல்கொள்முதல் நிலையங்களில் வாங்கிய நெல்லுக்கு பல மாதங்கள் ஆகியும் வழங்காமல் உள்ள பல கோடி ரூபாய் நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் முத்தகரம் பழனிச்சாமி, மாநில பொதுச் செயலா் ஆா்.சுப்பிரமணி ஆகியோா் வலியுறுத்தினா்.

கூட்டத்தில் வேளாண் உதவி இயக்குநா்கள் அன்பழகன், நடராஜன், பிரபு, பழனி, வட்டாட்சியா்கள் சு.மோகனராமன், இரா.முருகன், கே.துரைராஜ், தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் வேட்டவலம் மணிகண்டன், அறிஞா் அண்ணா விவசாய சங்க மாநிலத் தலைவா் சிவக்குமாா், விவசாய உரிமை மீட்பு சங்க மாநிலத் தலைவா் செங்கம் தாமஸ், தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலா் ஜெயகாந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.