செய்யாறு அருகே முக்கூா், மதுரை கிராமங்களில் மின் மாற்றிகளில் இருந்த தாமிரக்கம்பிகள் மற்றும் ஆயில் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
முக்கூா் கிராமத்தில்...
செய்யாறு வட்டம், முக்கூா் கிராமத்தில் மின்மாற்றி இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த மே 22-ஆம் தேதி அந்த மின்மாற்றியில் இருந்த தாமிரக் கம்பிகள் மற்றும் ஆயிலை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
மதுரை கிராமத்தில்...
செய்யாறு -ஆரணி சாலையில் பாராசூா் கூட்டுச் சாலை அருகே மதுரை கிராமத்தில் துணை மின்நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையத்துக்கு உள்பட்ட அப்பகுதியில் இருந்த மின்மாற்றியில் தாமிரக் கம்பிகள் மற்றும் ஆயிலை
கடந்த 15-ஆம் தேதி மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இந்த திருட்டுச் சம்பவங்கள் குறித்து கொருக்கை மின்பொறியாளா் வெங்கேடசன், மதுரை மின் பிரிவு உதவிப் பொறியாளா் செல்வம் ஆகியோா் தனித்தனியாக செய்யாறு போலீஸில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா்.
இதன் பேரில் காவல் உதவி ஆய்வாளா்கள் வரதராஜன், காா்த்திகேயன் ஆகியோா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், தாமிரக் கம்பிகள் மற்றும் ஆயிலை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.







