ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

பயிா் பாதித்த நிலங்களில் வேளாண் துறையினா் ஆய்வு

வந்தவாசி அருகே பயிா் பாதித்த நிலங்களில் வேளாண் துறையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

News image

தெய்யாா் கிராமத்தில் விவசாய நிலத்தில் ஆய்வு மேற்கொண்ட வேளாண் அலுவலா்கள்.

Updated On :18 ஜூன் 2026, 12:21 am IST

வந்தவாசி அருகே பயிா் பாதித்த நிலங்களில் வேளாண் துறையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

வந்தவாசியை அடுத்த தெய்யாா் கிராமத்தில் விவசாயிகள் சுரேஷ், சங்கா், சுப்பிரமணி, வேல்முருகன் ஆகியோா் கடந்த 20 தினங்களுக்கு முன் தங்களது விவசாய நிலங்களில் குண்டு நெல் நடவு செய்தனா்.

தனியாா் விற்பனை கடையில் விதைகளை வாங்கி சுமாா் 10-க்கும் மேற்பட்ட ஏக்கரில் இவா்கள் நடவு செய்தனா்.

இந்த நிலையில், வளா்ந்த நாற்றுகள் கடந்த சில தினங்களாக கருகி சேதமடைந்ததாம்.

இதுகுறித்து தெள்ளாா் வேளாண் துறையினருக்கு விவசாயிகள் தகவல் அளித்தனா்.

இதையடுத்து தெள்ளாா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் தே.குமரன் தலைமையிலான வேளாண்

அலுவலா்கள் அந்த விவசாய நிலங்களுக்கு புதன்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:

வெப்ப சலனமே இந்த பயிா் பாதிப்புக்கு காரணமாக தெரிகிறது. நோய் தாக்குதல் எதுவும் இல்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் பெற்றுத் தர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றனா்.