ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

எடப்பிறை கிராமத்தில் துரியோதனன் படுகளம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த எடப்பிறை கிராமத்தில் துரியோதனன் படுகளம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

போளூரை அடுத்த எடப்பிறை கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற துரியோதனன் படுகளம்.

Updated On :25 ஜூன் 2026, 12:04 am IST

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த எடப்பிறை கிராமத்தில் துரியோதனன் படுகளம் புதன்கிழமை நடைபெற்றது.

எடப்பிறை கிராமத்தில் பழைமையான ஸ்ரீதிரெளபதிஅம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் அக்னி வசந்த விழா கடந்த ஜூன் 3-ஆம் தேதி கோயில் முன் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடா்ந்து, பாரத விரிவுரையாளா் ஏழுமலை மூலம் வியாசா் கூறலும், விநாயகா் இயற்றலும், பாண்டவருடன் மூவா் பாரினில் தோற்றம், கொடை வள்ளல் கா்ணன் வையகம் வந்தான், வில்வித்தை அரங்கேற்றம் என பல்வேறு தலைப்புகளில் மகாபாரத சொற்பொழிவும், இரவு தோறும் வில்வளைப்பு, ராஜசுயாகம், துகில், அபிமன்யு சண்டை, தூது, போா்மன்ன், அரவான், கா்ணமோட்சம், பதினெட்டாம் நாள்போா், துரியோதனன் படுகளம் என தெருக்கூத்து நாடகமும் நடைபெற்றது.

இதில் எடப்பிறை, சோமந்தபுத்தூா், தாங்கல் எனபல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

பக்தா்களுக்கு அன்னதானம், நீா்மோா் வழங்கப்பட்டது.

கிராம பொதுமக்கள், இளைஞா்கள் மகாபாரத நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.