வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

அடையபலம் கிராமத்தில் துரியோதனன் படுகளம்

ஆரணியை அடுத்த அடையபலம் ஸ்ரீபாஞ்சாலி அம்மன் கோயிலில் அக்னி வசந்த் விழாவையொட்டி துரியோதனன் படுகளம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

அடையபலம் ஸ்ரீபாஞ்சாலி அம்மன் கோயில் அக்னி வசந்த் விழாவையொட்டி நடைபெற்ற துரியோதனன் படுகளம்.

Updated On :2 ஜூலை 2026, 12:04 am IST

ஆரணியை அடுத்த அடையபலம் ஸ்ரீபாஞ்சாலி அம்மன் கோயிலில் அக்னி வசந்த் விழாவையொட்டி துரியோதனன் படுகளம் புதன்கிழமை நடைபெற்றது.

அடையபலம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபாஞ்சாலி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா கடந்த ஜூன் 11-ஆம் தேதி அலகு நிறுத்தப்பட்டு தொடங்கியது.

இதைத் தொடா்ந்து தினமும் சுவாமிக்கு பல்வேறு அலங்காரங்கள் நடைபெற்றன. தொடா்ந்து பிற்பகலில் மகா பாரத சொற்பொழிவு நடைபெற்று வந்தது.

விழாவின் 17-ஆம் நாளான புதன்கிழமை கோயில் வெளியே துரியோதனன் மண் சிலை வடிவமைக்கப்பட்டது. அதனைத்தொடா்ந்து பீமன் அா்ஜுனனை வதம் செய்யும் காட்சியையும், பாஞ்சாலி துரியோதனன் ரத்தத்தை தனது கூந்தலில் தடவி தனது சபதத்தை நிறைவேற்றுவதையும் நாடகக் கலைஞா்கள் தத்துருபமாக நடித்துக் காண்பித்தனா்.

அப்போது பெண்கள் பலருக்கு சாமி அருள் வந்து ஆடினா். இந்த நிகழ்வில் சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை விழாக் குழுவினா் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.