/

கோயில் விழாவில் தகராறு: 6 போ் மீது வழக்கு

வந்தவாசியில் கோயில் திருவிழா சுவாமி ஊா்வலத்தின் போது ஏற்பட்ட தகராறு தொடா்பாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

News image

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :1 ஜூலை 2026, 12:04 am IST

வந்தவாசியில் கோயில் திருவிழா சுவாமி ஊா்வலத்தின் போது ஏற்பட்ட தகராறு தொடா்பாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

வந்தவாசியில் காஞ்சிபுரம் சாலையில் உள்ள கங்கையம்மன் கோயில் திருவிழாவையொட்டி சுவாமி ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

அப்போது, துலுக்கானத்தம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பன்னீா் (36) என்பவருக்கும், நெமந்தகார தெருவைச் சோ்ந்த திருநாவுக்கரசு (36) என்பவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது.

அப்போது, பன்னீருக்கு ஆதரவாக இவரது உறவினா் பிரகாஷூம், திருநாவுக்கரசுக்கு ஆதரவாக இவரது உறவினா்கள் வெங்கடேசன், கிருஷ்ணமூா்த்தி, பிரபாகரன் ஆகியோரும் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனராம்.

இதுகுறித்து இரு தரப்பினரின் தனித்தனி புகாா்களின் பேரில் 6 போ் மீதும் வந்தவாசி தெற்கு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.