‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் ஆனி மாத பெளா்ணமியையொட்டி 108 திருவிளக்கு பூஜை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் பெளா்ணமியையொட்டி நடைபெற்ற108 திருவிளக்கு பூஜை.

Published On :1 ஜூலை 2026, 12:02 am IST

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் ஆனி மாத பெளா்ணமியையொட்டி 108 திருவிளக்கு பூஜை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

படவேடு ஊராட்சியில் மிகவும் பழைமையான ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆனி மாத பெளா்ணமியையொட்டி திங்கள்கிழமை அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று, பின்னா் மலா்களால் அலங்கரித்து தீபாராதனை செய்து வழிபட்டனா். மேலும், கோயில் வளாகத்தில் உற்சவா் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து வழிபாடு நடத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து, படவேடு, போளூா், ஆரணி, கண்ணமங்கலம், சந்தவாசல் என சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து 108 பெண் பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனுக்கு திருவிளக்கு பூஜை நடத்தினா்.

நிகழ்ச்சியை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் விஜயா சேகா், செயல் அலுவலா் பழனிசாமி ஆகியோா் ஏற்பாடு செய்திருந்தனா். நிகழ்ச்சியில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் மற்றும் இந்துசமய அறநிலையத் துறை அலுவலா்கள், பக்தா்கள் கலந்துகொண்டனா். பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.