சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

கலையரங்குகள், சமையலறை கட்டடம், புதிய வழித்தடத்தில் பேருந்து

கலையரங்குகள், சமையலறை கட்டடம், புதிய வழித்தடத்தில் பேருந்து

News image

வடமணப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமையலறைக் கட்டடத்தை திறந்துவைத்த ஒ.ஜோதி எம்எல்ஏ

Updated On :7 மார்ச் 2026, 7:42 pm

செய்யாறு தொகுதி வெம்பாக்கம் ஒன்றியத்தில் புதிதாகக் கட்டப்பட்ட இரு கலையரங்குகள், சமையலறை கட்டடம் ஆகியவற்றை சனிக்கிழமை திறந்து வைத்த எம்.எல்.ஏ.ஒ.ஜோதி, புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்தை தொடங்கிவைத்தாா்.

வெம்பாக்கம் ஒன்றியம், பூதேரி புல்லவாக்கம் மற்றும் இருமரம் கிராமத்தில் 2025 - 26ஆம் ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.7 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட கலைஞா் நூற்றாண்டு கலையரங்க கட்டடம் தயாா் நிலையில் இருந்து வந்தது. ,

அதேபோல, வடமணப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2025 - 26ஆம் நிதியாண்டில் ரூ.9.60 லட்சத்தில் இருப்பறையுடன் கூடிய சமையலறை கட்டடம் கட்டப்பட்டு தயாா் நிலையில் இருந்து வந்தது.

இந்தக் கட்டடங்கள் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவா்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கும் நிகழ்ச்சி அந்தந்த பகுதிகளில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வெம்பாக்கம் மேற்கு ஒன்றியச் செயலா் (திமுக) எம்.தினகரன் தலைமை வகித்தாா்.

வெம்பாக்கம் மத்திய ஒன்றியச் செயலா் (திமுக) ஜேசிகே.சீனுவாசன் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி பங்கேற்று அரசுக் கட்டடங்களை திறந்து வைத்து இனிப்பு வழங்கிப் பேசினாா்.

வடமணப்பாக்கம் கிராமத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி,

கட்சி நிா்வாகிகளுடன் தந்தை பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினாா்.

அதனைத் தொடா்ந்து சிறுவாஞ்சிபட்டு கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்தை நிறைவேற்றும் வகையில்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் சாா்பில் செய்யாற்றில் இருந்து சிறுவஞ்கிப்பட்டு கிராமத்திற்கு செல்லும் தடம் எண்.9 புதிய வழித்தடத்தில் பேருந்தை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் திமுக நிா்வாகிகள் கருணாகரன், பிரகாசம், பெருமாள், டி.முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.