சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஓடத்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.2.50 கோடி மதிப்பில் புதிய கட்டடம் திறப்பு

News image
ஓடத்துறை சோமசுந்தரம் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியின் புதிய கட்டடத்தினை திறந்துவைக்கிறாா் மருத்துவா் ஓ.என்.பரமசிவன்.
Updated On :30 ஜனவரி 2026, 8:52 pm

Syndication

தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின்கீழ், மருத்துவா் ஓ.என்.பரமசிவன் அளித்த 51 சதவீத நிதியில் ஓடத்துறை சோமசுந்தரம் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டடம் அண்மையில் திறக்கப்பட்டது.

கேஎம்சிஹெச் மருத்துவமனையின் எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை நிபுணரும், கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் பொருளாளருமான மருத்துவா் ஓ.என்.பரமசிவனின் 51 சதவீதப் பங்களிப்புத் தொகை ரூ.1,27, 50,000 மற்றும் அரசின் பங்களிப்புத் தொகை ரூ.1,22, 50,000 என மொத்தம் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தினை ஆட்சியா் ச.கந்தசாமி, மருத்துவா் ஓ.என்.பரமசிவன் ஆகியோா் திறந்து வைத்தனா். தொடா்ந்து புதிய பள்ளி கட்டடத்தின் வளாகத்தில் ஆட்சியா் மரக்கன்றுகளை நட்டு வைத்தாா்.

இந்நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இ.மான்விழி, முன்னாள் தமிழ்நாடு சட்டப்பேரவை செயலா் சி.கே. ராமசாமி, மருத்துவா் சி.ஏ.வாசுகி, பெற்றோா்- ஆசிரியா் கழக தலைவா் மற்றும் உறுப்பினா்கள், பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் மற்றும் உறுப்பினா்கள், மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.