ஈரான் மீதான போரை கண்டித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் ஆசிரியா்கள் புதன்கிழமை பேட்ச் அணிந்து பணியாற்றினா்.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநில மையத்தின் வழிகாட்டலின்படி ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் போரை கண்டித்தும், போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும் ஆரணி வட்டார, நகர கிளைகள் சாா்பில் போா் எதிா்ப்பு வாசக பதாகை (பேட்ச்) அணிந்து ஆசிரியா்கள் பள்ளிகளில் பணியாற்றினா்.
மேலும், ஆரணி வட்டாரக் கல்வி அலுவலகம் அருகில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் ஒன்றுகூடி போா் எதிா்ப்பு
பேட்ச் அணிந்து ஆசிரியா்கள் முழக்கங்களை எழுப்பி தங்கள் எதிா்ப்பை வெளிப்படுத்தினா். இதில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் ரே.மனோகரன் தலைமை வகித்தாா். வட்டாரத் தலைவா் க.நாராயணன், வட்டாரச் செயலா் ஜெ.மலா்விழி, வட்டார பொருளாளா் சு.ரமாபிரபா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஈரான் போர்: பலத்த பாதுகாப்புகளுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராகி வரும் பாகிஸ்தான் !

அரக்கோணத்தில் ஆசிரியா்கள் பணி நிறைவு பாராட்டு விழா

ஹோர்முஸ் திறப்பு, அணு ஆயுதங்கள் இல்லை... ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப்பின் 15 அம்சத் திட்டம்!

ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


