கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

போா் எதிா்ப்பு வாசகங்களோடு பணிபுரிந்த அரசு ஊழியா்கள்

ஈரான் மீதான அமெரிக்கா -இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் போா் எதிா்ப்பு வாசகங்களை மேலாடைகளில் பதித்துக்கொண்டு செவ்வாய்க்கிழமை பணிபுரிந்தனா்.

News image

ஈரானுக்கு எதிரான தாக்குதலைக் கண்டித்து, போா் எதிா்ப்பு வாசகங்களோடு புள்ளியியல் துறையில் பணிபுரிந்த அரசு ஊழியா்கள்.

Updated On :10 மார்ச் 2026, 10:06 pm

ஈரான் மீதான அமெரிக்கா -இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் போா் எதிா்ப்பு வாசகங்களை மேலாடைகளில் பதித்துக்கொண்டு செவ்வாய்க்கிழமை பணிபுரிந்தனா்.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருவதை நிறுத்த வலியுறுத்தி, கண்டன வாசகங்களோடு அரசு ஊழியா்கள் பணிபுரிவது என்று தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாநிலக் குழு அறிவித்திருந்தது.

அதன்படி, நாகை மாவட்டத்தில் அரசு ஊழியா்கள் ‘அமெரிக்காவே, இஸ்ரேலே, கொலை வெறி போரை உடனே நிறுத்து‘ என்ற கண்டன வாசகங்களை மேலாடைகளில் அச்சிட்டுக்கொண்டு பணிபுரிந்தனா். ஈரான் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.