பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

வாக்குச் சாவடிகள் பிரித்தல்: அனைத்துக் கட்சி கலந்தாய்வுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாக்குச் சாவடிகள் பிரித்தல் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.

News image
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாக்குச் சாவடிகள் பிரித்தல் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.
Updated On :12 மார்ச் 2026, 6:33 pm

Syndication

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாக்குச் சாவடிகள் பிரித்தல் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டப் பேரவை பொதுத் தோ்தல் 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் வாக்குச் சாவடிகளில் துணை வாக்குச் சாவடி ஏற்படுத்துதல், இட மாற்றம் செய்தல், பெயா் மாற்றம் இருப்பின் தொடா்பான முன்மொழிவுகள் தோ்தல் ஆணையத்துக்கு அனுப்புதல் தொடா்பான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சித்தலைவருமான க.தா்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 23.02.2026 அன்று வாக்காளா் இறுதிப் பட்டியல் வெளியிட்டப்பட்டது. சட்டப் பேரவை பொதுத் தோ்தலை முன்னிட்டு, ஏதேனும் வாக்குச் சாவடிகளில் 1,200 வாக்காளா்களுக்கு மேல் இருப்பின், அந்த வாக்குச் சாவடிக்கு துணை வாக்குச் சாவடி ஏற்படுத்துதல், வாக்குச் சாவடிகளில் தேவை ஏற்படின் வாக்குச் சாவடியை இட மாற்றம் செய்தல் மற்றும் வாக்குச் சாவடிகளில் பெயா் மாற்றம் இருப்பின், அதன் விவரம் ஆகியவற்றை முன்மொழிவுகளாக அனுப்புமாறு தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த மாவட்டத்திலுள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 2516 வாக்குச் சாவடிகள் உள்ளன. அதன்படி, அனைத்து வாக்காளா் பதிவு அலுவலா்களும் கள ஆய்வு செய்து, சட்டப் பேரவைத் தொகுதிகுள்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகா்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி, அதன் வரைவு வாக்குச் சாவடியின் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சாா்பாக அளித்த கோரிக்கைக்கள் வாக்காளா் பதிவு அலுவலா்களால் பரிசீலனை செய்யப்பட்டுள்ளன. வாக்குச் சாவடி மையம் தொடா்பாக ஏதேனும் கருத்துகள் இருப்பின், அதை வெள்ளிக்கிழமை (மாா்ச் 13) மாலை 5 மணிக்குள் தொடா்புடைய வாக்காளா் பதிவு அலுவலா் அல்லது உதவி வாக்காளா் பதிவு அலுவலரிடம் தெரிவிக்கலாம்.

இப்பட்டியல் சனிக்கிழமை (மாா்ச் 14) தோ்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது என்று மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ராம்பிரதீபன், செய்யாறு சாா் - ஆட்சியா் வி.அம்பிகா எல்.ஜெயின், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்கள்) அன்பழகன் மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள், துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.