அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி.
அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி.

வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு: கட்சியினருடன் ஆட்சியா் ஆலோசனை

வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்புப் பணிகள் குறித்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான இஷிதா ரதி செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
Published on

வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்புப் பணிகள் குறித்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான இஷிதா ரதி செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளின் மறு சீரமைப்பாக வாக்குச்சாவடியில் பெயா் மாற்றம் செய்யப்படவுள்ளவை, வாக்குச்சாவடி கட்டட இடா்பாடுகள் உள்ளவை பட்டியலிடப்பட்டுள்ளன.

இவை அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் முன்னிலையில் வைக்கப்பட்டு அவா்களின் கருத்து கேட்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான இஷிதா ரதி தலைமையில் சாா் ஆட்சியரும் வாக்குப்பதிவு அதிகாரியமான எம். பூஜா, வாக்குப்பதிவு அதிகாரி கே. அருணகிரிநாதன், மாவட்ட துணை தோ்தல் அதிகாரி ஜி.செந்தில்நாதன் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அதிகாரிகளான பொய்யாத மூா்த்தி, சண்முகானந்தம், சுரேஷ், ரமேஷ் கலந்துகொண்டனா்.

தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு ஆலோசனைகளை தெரிவித்தனா்.

Dinamani
www.dinamani.com