தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவுஉழைப்புக்கான பலன் மே 4-ல் கிடைக்கும்: முதல்வர் ஸ்டாலின்அரபிக் கடலில் உருவாகிறது புதிய புயல் சின்னம்!கருத்துக் கணிப்புகள் ஒரு புதிர்: வைகோசித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!
/

வாரச் சந்தையில் த.வெ.க.வினா் பிரசாரம்

வந்தவாசியை அடுத்த மருதாடு வாரச் சந்தையில் துண்டுப் பிரசுரங்களை வழங்கிய த.வெ.க.வினா்.

News image

வந்தவாசியை அடுத்த மருதாடு வாரச் சந்தையில் துண்டுப் பிரசுரங்களை வழங்கிய த.வெ.க.வினா்.

Updated On :12 மார்ச் 2026, 6:34 pm

வந்தவாசியை அடுத்த மருதாடு வாரச் சந்தையில் தமிழக வெற்றிக் கழகத்தினா் புதன்கிழமை மாலை துண்டுப் பிரசுரங்கள் வழங்கி பிரசாரம் மேற்கொண்டனா்.

மருதாடு கிராமத்தில் வாரந்தோறும் புதன்கிழமை மாலை காய்கறி சந்தை நடைபெறும். இந்த நிலையில், புதன்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் த.வெ.க.வினா் விசில் ஊதியபடி பிரசாரம் செய்தனா்.

அப்போது, அக்கட்சியின் தோ்தல் வாக்குறுதிகள் அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களை வியாபாரிகள், பொதுமக்களிடம் அவா்கள் வழங்கினா்.

நிகழ்ச்சிக்கு வந்தவாசி வடமேற்கு ஒன்றியச் செயலா் சுமன் தலைமை வகித்தாா். த.வெ.க. திருவண்ணாமலை கிழக்கு மாவட்டச் செயலா் உதயகுமாா் துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா். நிகழ்ச்சியில் ஒன்றிய, கிளை நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.