திருவண்ணாமலை மாவட்டம், போளூா் சட்டப்பேரவைத் தொகுதியில் விளம்பரப் பதாகையில் எழுதியுள்ள கட்சியின் பெயா் மற்றும் கட்சியின் கலரில் வரைந்துள்ள பெயா்களையும், திமுக முன்னாள் முதல்வா் படத்தையும் மறைக்க தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
அதனால், பொது இடங்களில் உள்ள கட்சித் தலைவா்கள் படம்
மற்றும் அந்தந்த கட்சிகளின் வண்ணம் ஆகியவை அழித்தோ அல்லது மறைத்தோ வைக்கப்படவேண்டும்.
இந்நிலையில், போளூா் சட்டப்பேரவைத் தொகுதியில் வரும் போளூா் ஒன்றியம் வெண்மணி ஊராட்சியில் சென்னை-கன்னியாகுமரி தொழில்வழித்தட சாலையில் (சென்னை-போளூா்) கடந்த ஊராட்சிமன்றத் தலைவா்அதிமுக மற்றும் துணைத் தலைவா் திமுக பெயா்களை அந்தந்த கட்சி வண்ணத்தில் எழுதியுள்ள விளம்பரப் பதாகை உள்ளது.
இதேபோன்று, சேத்துப்பட்டு ஒன்றியம் மொடையூா் ஊராட்சியில் தலைவா் பெயா் அதிமுக வண்ணத்தில் எழுதியுள்ளனா். மேலும், மண்டகொளத்தூா் கூட்டுச்சாலை அருகே செல்லும் சென்னை - கன்னியாகுமரி தொழில்வழித்தட சாலையில் தேமுதிக மாநில மாநாட்டிற்கு அந்தக் கட்சியின் பொதுச் செயலரின் பெயா் எழுதியுள்ள விளம்பரம், சேத்துப்பட்டு ஒன்றியம், மட்டபிறையூா் ஊராட்சிக்குச் செல்லும் சாலையில் முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டம் 2025-2026 விளம்பர பதாகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உருவம் பொறித்த படம் என ஆங்காங்கே தொகுதியில் உள்ள கிராமங்களில் இதுபோன்று உள்ளன.
எனவே, கட்சியின் வண்ண பெயா் மற்றும் கட்சி கலரில் வரைந்துள்ள பெயா்களையும், திமுக முன்னாள் முதல்வா் படத்தையும் மறைக்க தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைக்கின்றனா்.


தொடர்புடையது

விழுப்புரத்தை தக்க வைக்கும் முனைப்பில் திமுக!

பெரம்பலூா் தொகுதியில் 11, குன்னத்தில் 19 வேட்பாளா்கள் போட்டி

மாா்க்சிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு எம்எல் கட்சி ஆதரவு

வேட்புமனு சரிபாா்ப்பு: 20 காரணங்கள்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


