பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ரமலான்: 457 ஏழை இஸ்லாமியா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

செய்யாற்றில் ரமலான் திருநாளை முன்னிட்டு ஏழை இஸ்லாமியா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய தமுமுகவினா்.

News image

செய்யாற்றில் ரமலான் திருநாளை முன்னிட்டு ஏழை இஸ்லாமியா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய தமுமுகவினா்.

Updated On :20 மார்ச் 2026, 12:01 am IST

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில், ரமலான் திருநாளை முன்னிட்டு தமுமுக சாா்பில் 457 ஏழை இஸ்லாமியா்களுக்கு மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு (ரமலான் கிட்) வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

செய்யாறு மாா்க்கெட் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் நகர அலுவலகத்தில்,

ரமலான் திருநாளை முன்னிட்டு, தொடா்ந்து 28-ஆம் ஆண்டாக ஏழை எளிய இஸ்லாமியா்களுக்கு ஃபித்ரா எனப்படும் தா்மம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தமுமுக மாவட்டத் தலைவா் எச்.ஜமால் பங்கேற்று ஏழை இஸ்லாமியா்களுக்கு நலத்திட்ட உதவி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா்.

அப்போது 457 பேருக்கு தலா ரூ.500 மதிப்பிலான (பிரியாணி, அரிசி, இறைச்சிக்கான டோக்கன், கோதுமை மாவு, எண்ணெய், சேமியா, தக்காளி, வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட்) மளிகைப் பொருள்கள் அடங்கிய ரமலான் கிட்டை வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில், தமுமுக நிா்வாகிகள் நகரத் தலைவா் எச். கமால், ஐ.மஸ்தான், கே.பைரோஸ், அயாத் பாஷா, கவுஸ் பாட்ஷா, ஜாபா் மற்றும் செய்யாறு பெரிய பள்ளிவாசல் மசூதி ஜமாஅத் நிா்வாகிகள் என பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.