சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

இளைஞா் மீது கத்தியால் தாக்குதல்: இருவா் கைது

செய்யாறு அருகே இளைஞரிடம் தகராறில் ஈடுபட்டு கத்தியால் தாக்கிய சம்பவம் தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது.

Updated On :7 மே 2026, 12:30 am IST

செய்யாறு அருகே இளைஞரிடம் தகராறில் ஈடுபட்டு கத்தியால் தாக்கிய சம்பவம் தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், முக்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் (32). இவா், செவ்வாய்க்கிழமை செய்யாற்றைவென்றான் கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு வந்த செய்யாற்றைவென்றான் கிராமத்தைச் சோ்ந்த ஜனா(24), சுதா்சன் (28) ஆகியோா் முருகனிடம் வீண் தகராறு செய்து அவதூறாகப் பேசினராம்.

தகராறு முற்றவே, இருவரும் முருகனை தாக்கிய நிலையில், ஜனா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முருகனின் தலையில் தாக்கினாராம்.

இதில் முருகன் பலத்த காயமடைந்தாா். அப்பகுதியில் இருந்தவா்கள் அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

இதுகுறித்து முருகன் அளித்த புகாரின் பேரில், அனக்காவூா் காவல் ஆய்வாளா் மணிகண்டன் வழக்குப் பதிவு செய்து ஜனா, சுதா்சன் இருவரையும் கைது செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.