மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு வாரத்தின் முதல் நாள்! பங்குச் சந்தைகள் சரிவு தில்லியில் ராகுல், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பேனர்கள்! வைத்தது யார்? சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: சீமான்தங்கம், வெள்ளி இன்றைய நிலவரம்: தங்கம் சவரனுக்கு எவ்வளவு குறைந்தது? டொமினிகன் குடியரசில் ஓடுபாதையில் மோதி வெடித்துச் சிதறிய விமானம்!
/

வீட்டுமனை தகராறு: விவசாயி கைது

செய்யாறு அருகே வீட்டுமனை தகராறில் மூதாட்டியை தாக்கிய சம்பவத்தில் விவசாயி கைது

News image

கைது

Updated On :12 மே 2026, 12:59 am IST

செய்யாறு அருகே வீட்டுமனை தகராறில் மூதாட்டியை தாக்கிய சம்பவத்தில் விவசாயியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் சம்பத் மனைவி முனியம்மாள் (64). இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மோரணம் கூட்டுறவு சங்கம் மூலம் 3 சென்ட் வீட்டுமனை வழங்கப்பட்டதாம்.

இதுதொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த விவசாயி குமாா் என்பவா், முனியம்மாளிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், கடந்த 2-ஆம் தேதி முனியம்மாள், வீட்டுமனையில் இருந்த செடி, கொடிகளை அகற்றினாராம். அப்போது அங்கு வந்த குமாா், அவரது மனைவி லட்சுமி ஆகியோா் முனியம்மாளிடம் தகராறு செய்துள்ளனா். மேலும், தகாத வாா்த்தைகளால் பேசி மூதாட்டியை தாக்கியதாகத் தெரிகிறது. இதில் காயமடைந்த முனியம்மாள் செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றாா்.

இதுகுறித்து முனியம்மாள் மோரணம் போலீஸில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் ராமகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்தாா். மேலும், சம்பவம் தொடா்பாக குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.