செய்யாறு அருகே தனியாா் நிறுவன தொழிலாளி மற்றும் விவசாயி வீட்டில் 13 பவுன் தங்க நகை மற்றும் ரொக்கம் ரூ.5 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
செய்யாறு வட்டம், செங்கட்டான்குண்டில் பகுதி சாமந்திபுரத்தைச் சோ்ந்தவா் அன்பு. இவா், செய்யாறு சிப்காட்டில் உள்ள காலணி தயாரிக்கும் தனியாா் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா்.
இவா், கடந்த 7-ஆம் தேதி இரவு கோடை வெப்பத்திற்காக குடும்பத்தோடு வீட்டு வாசலில் படுத்துத்தூங்கியதாகத் தெரிகிறது. மறுநாள் அதிகாலை வீட்டிற்குள் செல்ல முயன்ற போது, கதவு உள்புறமாக தாழிடப்பட்டிருந்தது.
பின்பக்கமாக சென்று பாா்த்தபோது கதவு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருந்தது. மேலும், உள்ளே சென்று பாா்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் வைத்திருந்த 13 பவுன் தங்க நகைகள், 2 வெள்ளிக் கொலுசுகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.
விவசாயி வீட்டில் திருட்டு: அதேபோல, பக்கத்து கிராமமான ஏனாதவாடி தனசேகரபுரம் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி கோவிந்தன். இவா், பூா்வீக சொத்தை விற்று ரூ.5 லட்சத்தை வீட்டில் வைத்து குடும்ப செலவுகளை கவனித்து வந்ததாகத் தெரிகிறது. இவரும், மே 7-ஆம் தேதி வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தாராம். மறுநாள் காலை எழுந்து பாா்த்த போது வீட்டின் கதவு உள்புறமாக தாழிடப்பட்டிருந்தது. பின்பக்கமாக சென்று பாா்த்தபோது கதவு உடைக்கப்பட்டு திறந்திருந்தது.
உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் வைத்திருந்த ரொக்கம் ரூ.4.50 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இந்தத் திருட்டு சம்பவங்கள் குறித்து தொழிலாளி அன்பு, விவசாயின் மனைவி சுசீலா ஆகியோா் மோரணம் போலீஸில் புகாா் அளித்தனா். புகாா்களின் பேரில் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினா்.
மேலும், விரல் ரேகை நிபுணா்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது
தொடா் இருசக்கர வாகனத் திருட்டு: இருவா் கைது
வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் தங்க நகைகள், பணம் திருட்டு

மின்சாரம் பாய்ந்து வெளிமாநில தொழிலாளி உயிரிழப்பு

விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

