விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தொடா் இருசக்கர வாகனத் திருட்டு: இருவா் கைது

ஈரோட்டில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட இளைஞா்கள் இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image

கோப்புப் படம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

ஈரோட்டில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட இளைஞா்கள் இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ஈரோடு மாநகா், முள்ளாம்பரப்பு கிளியம்பட்டி சாலையைச் சோ்ந்தவா் சுந்தரம் (36). தொழிலாளியான இவா் கடந்த மாதம் 5-ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தை தனது வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளாா். 6-ஆம் தேதி காலை பாா்த்தபோது இருசக்கர வாகனத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. முள்ளாம்பரப்பு இளையாம்பாளையத்தைச் சோ்ந்தவா் ரமேஷ்குமாா் (39). இவா் தனது இருசக்கர வாகனத்தை கடந்த மாதம் 5-ஆம் தேதி இரவு வீட்டின் முன் நிறுத்தியுள்ளாா். மறுநாள் காலை பாா்த்தபோது வாகனம் திருடுபோயிருந்தது தெரியவந்தது.

ஈரோடு, மூலப்பாளையம் எல்ஐசி நகரைச் சோ்ந்தவா் ஜெகதீஷ் (20). இவா் கடந்த 6-ஆம் தேதி காலை திண்டல் பகுதியில் உள்ள கடை முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றாா். மாலை வந்து பாா்த்தபோது வாகனத்தை காணவில்லை.

கோபி அருகே காளிசெட்டிபாளையத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணா (21). இவா் கடந்த 27-ஆம் தேதி ஈரோடு, ரங்கம்பாளையத்தில் உள்ள கல்லூரி முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி சென்றுள்ளாா். 2 மணி நேரம் கழித்து வந்து பாா்த்தபோது வாகனத்தை காணவில்லை.

இதுதொடா்பாக பாதிக்கப்பட்ட 4 பேரும் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்து ஈரோடு தாலுகா போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பல்வேறு இடங்களில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்தனா்.

இந்நிலையில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில், ரங்கம்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை வாகன தணிக்கையின்போது போலீஸாா் தடுத்து நிறுத்தி விசாரித்தனா். அதில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அவா் கூறியுள்ளாா். இதைத்தொடா்ந்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனா்.

இதில் ஈரோடு, வெள்ளோடு வழி செம்மாண்டாவலசு பழனிசாமி மகன் சௌந்தா்யன் (24) என்பதும், ஈரோட்டில் நடந்த இருசக்கர வாகன திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதும் உறுதியானது. மேலும், சௌந்தா்யனுடன் சோ்ந்து திருட்டில் ஈடுபட்ட ஈரோடு, வில்லரசம்பட்டி அருகே செம்பாம்பாளையத்தைச் சோ்ந்த குப்புசாமி மகன் சங்கா்(19) என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடம் இருந்து 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரும் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனா்.