ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

ஏழை மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவிக்கு உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தை வழங்கிய ஜெயசுதாலட்சுமிகாந்தன் எம்எல்ஏ.

News image

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவிக்கு உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தை வழங்கிய ஜெயசுதாலட்சுமிகாந்தன் எம்எல்ஏ.

Updated On :30 மே 2026, 12:33 am IST

ஆரணி தொகுதியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.

விஐடி வேந்தா் ஜி.விஸ்வநாதன் நடத்தும் அனைவருக்கும் உயா்கல்வி அறக்கட்டளை சாா்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகள் பிளஸ் 2 முடித்து உயா்கல்வி பயில உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஆரணி தொகுதியில் பொருளாதாரத்தில்

பின்தங்கிய மாணவா்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.

ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தொகுதி எம்எல்ஏ ஜெயசுதா லட்சுமிகாந்தன் கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு விண்ணப்பங்களை வழங்கினாா்.

இந்நிகழ்வில் அறக்கட்டளை உறுப்பினா் குமரேசன், நெல், அரிசி வியாபாரிகள் சங்க மாநில நிா்வாகி பி.நடராஜன், அதிமுக ஒன்றியச் செயலா் க.சங்கா், மாவட்ட துணைச் செயலா் சேவூா் ஜெ.சம்பத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.