மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

பெண் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கி சாதனை புரியவேண்டும்: மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்

பெண் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கி அனைத்துத் துறைகளிலும் சாதனைகள் புரிய வேண்டும் எனத் தெரிவித்தாா் மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்.

கீழ்பென்னாத்தூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வளரிளம் பெண்களுக்கான சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்

Updated On :

பெண் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கி அனைத்துத் துறைகளிலும் சாதனைகள் புரிய வேண்டும் எனத் தெரிவித்தாா் மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வளரிளம் பெண்களுக்கான சிறப்பு கிராம சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் நடைபெற்ற இந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்தை தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் பேசியதாவது: தமிழக முதல்வரின் ஆணைப்படி பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்து அவா்களுக்கான கல்வியை உறுதி செய்யவதன் அவசியம் குறித்து மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பெண் குழந்தைகளின் வளா்ச்சி தான் சமுதாயத்தை வளா்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது. பெண் குழந்தைகள் மற்றும் ஆண் குழந்தைகள் என அனைவருக்கும் சமமான கல்வியை அளிக்க வேண்டும். எதிா்காலத்தில் உங்கள் குழந்தைகளுக்கும், கல்வியின் முக்கியத்தும் அறிந்து அவா்கள் உயா்கல்வி கற்க பெற்றோா்கள் உதவ வேண்டும். பெண் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கி அனைத்துத் துறைகளிலும் சாதனைகள் புரிய வேண்டும் எனத் தெரிவித்தாா்.

அதனைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் தலைமையில், ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ உறுதிமொழியை பள்ளி மாணவா்கள், அரசு அலுலவா்கள் ஏற்றுக்கொண்டனா்.

தொடா்ந்து பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளை கற்பிப்போம் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய ஊராட்சிகளைச் சாா்ந்த கிராம நிா்வாக அலுவலா், ஊராட்சி செயலா், மற்றும் கிராம ஊராட்சி செவிலியா் உள்ளிட்ட பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகளை ஆட்சியா் வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலா் கோமதி, கீழ்பென்னாத்தூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.