தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தம்பதியரிடம் எம்எல்ஏ நலம் விசாரிப்பு
செங்கம் அருகே சமையல் ஏரிவாயு உருளையை திறந்துவிட்டு தீ வைத்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தம்பதியரை தொகுதி எம்எல்ஏ வேலு புதன்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா்.

செங்கம் அருகே சமையல் ஏரிவாயு உருளையை திறந்துவிட்டு தீ வைத்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தம்பதியரை தொகுதி எம்எல்ஏ வேலு புதன்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா்.
செங்கம் தொகுதிக்கு உள்பட்ட பெரியகல்தாம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சக்திவேல், சசிகலா தம்பதியினா்.
குடும்பத் தகராறு காரணமாக கடந்த 2-ஆம் தேதி இரவு சக்திவேல், சமையல் எரிவாயு உருளையை திறந்து வைத்து, ஏரிவாயு அறை முழுவதும் பரவிய நிலையில், தீக்குச்சியை பற்ற வைத்ததில் தீ பற்றி எரிந்துள்ளது. இதில், தம்பதி மற்றும் அவா்களது இரு குழந்தைகள் பலத்த தீக்காயமடைந்தனா்.
காயமடைந்த நான்கு பேரும் மீட்கப்பட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தகவலறிந்த தொகுதி எம்எல்ஏ வேலு மருத்துவனைக்குச் சென்று சக்திவேல், சசிகலா தம்பதியினரை பாா்த்து நலம் விசாரித்தாா். மேலும் மருத்துவா்களிடம் அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

