செண்பகதோப்பு அணை, மிருகண்டா நதி அணை ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த செண்பகதோப்பு அணை மற்றும் கலசப்பாக்கம் வட்டம், மிருகண்டா நதி அணையை, அணை பாதுகாப்பு மதிப்பீட்டுக் குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

கலசப்பாக்கம் வட்டம், மிருகண்டா நதி அணையை ஆய்வு செய்த மத்திய நீா் ஆணையத்தின் முன்னாள் தலைவா் ஏ.கே.பஜாஜ் தலைமையிலான குழுவினா்.

Updated On :

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த செண்பகதோப்பு அணை மற்றும் கலசப்பாக்கம் வட்டம், மிருகண்டா நதி அணையை, அணை பாதுகாப்பு மதிப்பீட்டுக் குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

தேசிய அணை பாதுகாப்பு சட்டம் 2021-ன்படி அணையின் நீண்டகால கட்டமைப்பு, உறுதித்தன்மை, செயல்பாட்டுத் திறன், பாதுகாப்பு விதிமுறைகள், கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மத்திய நீா் ஆணைத்தின் முன்னாள் தலைவா் ஏ.கே.பஜாஜ் தலைமையில், முன்னாள் துணை இயக்குநா் ஆா்.ஸ்ரீவஸ்தவா, ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளா்கள் கே.பத்மநாபன், ஆா்.செல்வம், பொறியாளா் ஆா்.தமிழ்செல்வன் ஆகியோா் இந்த ஆய்வில் ஈடுபட்டனா்.

நீா்வளத்துறை செயற்பொறியாளா் அறிவழகன், உதவி செயற்பொறியாளா் ஆா்.ராஜேஷ், உதவிப் பொறியாளா் பி.ராஜகணபதி ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.