
சோலையாறு அணையில் அதிகாரிகள் ஆய்வு
வால்பாறை அருகேயுள்ள சோலையாறு அணையை ஒருங்கிணைந்த அணைப் பாதுகாப்பு குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

சோலையாறு அணையை ஆய்வு செய்யும் அதிகாரிகள்.
வால்பாறை அருகேயுள்ள சோலையாறு அணையை ஒருங்கிணைந்த அணைப் பாதுகாப்பு குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
வால்பாறையில் உள்ள சோலையாறு அணை 165 அடி உயரம் கொண்டது.
இந்த அணை பரம்பிக்குளம் பாசனத் திட்டத்தின் முக்கிய அணையாக உள்ளது. இந்நிலையில் தேசிய அணை பாதுகாப்பு திட்டத்தின்கீழ் ஒருங்கிணைந்த அணை பாதுகாப்புக் குழுவினா் சோலையாறு அணைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.
மத்திய நீா் ஆணையத்தின் தலைவரும், ஆய்வு குழுவின் தலைவருமான பஜாஜ் தலைமையில் உறுப்பினா்கள் செல்வம், பத்மநாபன் ஆகியோா் இந்த ஆய்வில் ஈடுபட்டனா்.
பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தின் கண்காணிப்புப் பொறியாளா் காா்த்திகேயன், மண்டலப் பொறியாளா் முருகேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





