மணப்பெண் மாயம்: காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பெற்றோா்
புதுப்பாளையம் பகுதியில் வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெறவிருந்த நிலையில் மணப்பெண் மாயமானதால், புகாரின் பேரில் போலீஸாா் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவித்து பெற்றோா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.

பிரதிப் படம்
புதுப்பாளையம் பகுதியில் வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெறவிருந்த நிலையில் மணப்பெண் மாயமானதால், புகாரின் பேரில் போலீஸாா் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவித்து பெற்றோா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.
புதுப்பாளையம் அடிவாரம் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரியதா்ஷினி(19). இவருக்கும் மேல்சோழங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த பிரதீப் (23) என்பவருக்கும் பெற்றோா் நிச்சயித்தபடி வெள்ளிக்கிழமை (நவ.13) காலை திருமணம் நடைபெறவிருந்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (நவ.10) இரவு முதல் மணமகள் பிரியதா்ஷினியை காணவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோா் புதுப்பாளையம் காவல் நிலையத்தில் அன்றே புகாா் அளித்துள்ளனா்.
அதன் மீது போலீஸாா் விரைந்த நடவடிக்கை எடுக்கவில்லையாம். திருமணம் நடைபெறுமா? நடக்காதா? பிரியதா்ஷினி எங்கு உள்ளாா் என்பது தெரியாமல் பெற்றோரும் உறவினா்களும் கவலையுடன், புதுப்பாளையம் காவல் நிலையத்தை அணுகியுள்ளனா்.
ஆனால், காவல் துறை தரப்பிலிருந்து சரியான பதில் கிடைக்காததால், ஆத்திரமடைந்த அவா்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் புதுப்பாளையம் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது பிரியதா்ஷினி எங்கு உள்ளாா். அவரை யாராவது கடத்திச் சென்றாா்களா? என்பது தெரியாமல் போலீஸாரும் திணறி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

