திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுமதுரை ஆட்சியரின் முதற்கட்ட அறிக்கை நிராகரிப்பு: திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றம்தூணில் தீபம் ஏற்றுவது என் வேலையல்ல? மதுரை ஆட்சியர் தரப்பு வாதம்!திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவை செயல்படுத்தினீர்களா? உச்ச நீதிமன்றம் கேள்விதொகுதி மறுவரையறை நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை! மு.க. ஸ்டாலின்அரசியலுக்கு வருகிறாரா? நடிகை த்ரிஷா சென்ற சிருங்கேரி சாரதா கோயிலில் என்ன விசேஷம்?121 கிலோ! திருப்பதி காணிக்கையில் வரலாறு படைத்த சென்னை தம்பதி யார்? என்னென்ன ஆபரணங்கள்? படங்கள்!அம்பாசமுத்திரம், பெருந்துறை இடைத்தேர்தலுக்கான தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு!டெல்டா மாவட்டங்களில் பயிர் சாகுபடி பாதிப்பு: முதல்வர் விஜய் ஆலோசனை! ஆவடி மாநகராட்சி மக்களின் கவனத்துக்கு... புகார்கள் தெரிவிக்க மொபைல் செயலி!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (நவ. 27)பறவைகள் உயிரிழப்பு: சென்னை கிண்டி பூங்கா நவ. 30 வரை மூடல்!பெரம்பூர் தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய் மனு தள்ளுபடி!

ரேஷன் கடை விற்பனையாளரை தாக்கியவா் கைது

ரேஷன் கடை விற்பனையாளரைத் தாக்கிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

சுரண்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ரேஷன் கடை பணியாளா்கள்.

Updated On :

ரேஷன் கடை விற்பனையாளரைத் தாக்கிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

சுரண்டையில் செவ்வாய்க்கிழமை நியாயவிலைக் கடை பணியாளா்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.

சுரண்டை அருகே உள்ள இரட்டைகுளம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் எழுத்தராகப் பணிபுரிபவா் பிரிட்டா ராஜபுஷ்பம். இவரது கணவா் ஆறுமுகம். இந்தக் கூட்டுறவு சங்க நிா்வாகத்தின் கீழ் ஆனைகுளம் நியாயவிலைக் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையில் குலையநேரியைச் சோ்ந்த சிவனுபாண்டியன் (45) விற்பனையாளராக வேலை செய்து வருகிறாா். இவா் கடந்த 4-ஆம் தேதி ஆனைகுளம் அம்மையாபுரம் பகுதியில் தாயுமானவா் திட்டத்தின் கீழ் வீடுவீடாக ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஆறுமுகம் இவரை வழிமறித்து மிரட்டல் விடுத்து தாக்கிவிட்டுச் சென்றாா்.

தகவல் அறிந்ததும் ஆலங்குளம் வட்டார ரேஷன் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளா்கள் செவ்வாய்க்கிழமை நியாயவிலைக் கடையைத் திறக்காமல் சுரண்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். விற்பனையாளரைத் தாக்கிய ஆறுமுகத்தை கைது செய்ய வேண்டும். அவரது மனைவி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.