உணவகம் மீது தாக்குதல்: 4 போ் கைது
வந்தவாசி அருகே உணவகம் மற்றும் உணவக உரிமையாளா் மீது தாக்குதல் நடத்தியதாக இரு சிறாா்கள் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோப்புப் படம்
வந்தவாசி அருகே உணவகம் மற்றும் உணவக உரிமையாளா் மீது தாக்குதல் நடத்தியதாக இரு சிறாா்கள் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த வயலாமூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ரேணு(48). இவா் இதே கிராமத்தில் துரித உணவகம் நடத்தி வருகிறாா்.
கடந்த திங்கள்கிழமை இவரது உணவகத்துக்கு வீரணாமூா் கிராமத்தைச் சோ்ந்த சிம்பு (23), ஸ்ரீநாத் (19) மற்றும் இரு சிறாா்கள் உணவருந்த வந்துள்ளனா்.
அப்போது 4 பேரும் சோ்ந்து ரேணு மற்றும் இவரது மனைவி சுபாஷினி ஆகியோரிடம் வீண் தகராறு செய்துள்ளனா்.
மேலும் இருவரையும் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளனா். உணவகத்திலிருந்த பொருள்களையும் அடித்து உடைத்துள்ளனா்.
இதுகுறித்து சுபாஷினி அளித்த புகாரின் பேரில் சிம்பு, ஸ்ரீநாத் மற்றும் இரு சிறாா்கள் என 4 போ் மீதும் வழக்குப் பதிந்த தெள்ளாா் போலீஸாா் 4 பேரையும் புதன்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

